Tuesday, July 14, 2015

அருகதையுண்டா காங்கிரஸ் கட்சிக்கு?



அட்டகாசமான லைட்டிங், கலர் காம்பினேஷனோடு ஒரு திரைப்பட போஸ்டருக்கான கச்சிதத்தோடு மேலே உள்ள படம் அமைந்துள்ளது.

சொல்லப்பட்ட விஷயமும் மிகவும் சரியானதுதான்.

இதை சொல்லியது காங்கிரஸ் கட்சி என்பதுதான் இடிக்கிறது.

ஆனால் இதைச் சொல்லும் அருகதை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா?

ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், நிலக்கரி, இஸ்ரோ, ஹெலிகாப்டர் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஊழலுக்கு மேல் ஊழல் என்று புகார்கள் குவிந்து கொண்டிருந்ததே! அப்போதெல்லாம் மன்மோகன்சிங் என்ன செய்து கொண்டிருந்தார்?

ஊழல் குட்டையில்  ஊறிய இரண்டு மட்டைகள் காங்கிரஸும் பாஜகவும்.

இரண்டையும் வெளியேற்றினால்தான் ஸ்வச்ச பாரத் கிடைக்கும்.
அதாங்க தூய்மையான இந்தியா

No comments:

Post a Comment