Tuesday, July 21, 2015

மோடிஜி, ரீல் அந்து போய் ரொம்ப நேரமாச்சு




நாற்பத்தி ஆறாவது முத்தரப்பு இந்தியத் தொழிலாளர் மாநாடு நேற்று தொடங்கியது.   மத்தியரசு, முதலாளிகள், தொழிற்சங்கங்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் மாநாடு. தொழிலாளர் விரோதத்துறை (நலத்துறை என்று சொன்னால் அவர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்)  இம்முத்தரப்பு மாநாட்டை ஏற்பாடு செய்யும். 

இந்த வருடாந்திர சடங்கில் பிரதமர் கலந்து கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கும் சம்பிரதாயமும் நடக்கும்.

அது போல இந்த ஆண்டு அந்த சாங்கியத்தை மோடி செய்திருக்கிறார்.

தொழிலாளர்களின் கண்ணியத்தைக் காப்பது, கருத்தொற்றுமையின் அடிப்படையில் தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது, தொழிலகங்களை பாதுகாப்பது என்பது தொழிலதிபர்களை பாதுகாப்பதாக அமைகிறது என்றெல்லாம் அவர் வீர வசனம் பேசி விட்டு அமர்ந்து விட்டார்..

 ஆனால் பாஜக கட்சியின் தொழிற்சங்கமான பி.எம்.எஸ் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான பி.என்.ராய் என்பவர் அந்த இடத்திலேயே 

பாஜக அரசு தவறான கொள்கைகளை பின்பற்றி வருகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களில் கொண்டு வந்துள்ள திருத்தங்கள்  எல்லாம் மிகவும் பிற்போக்குத்தனமானது. அதையெல்லாம் திரும்பப் பெற வேண்டும் என்று போட்டு உடைத்து விட்டார்.

மாமன் மகள் என்ற படத்தில் கவுண்டமணி சத்தியராஜிடம்.

"போதும்டா சாமி. ரீல் அந்து போய் ரொம்ப நேரமாச்சு" என்பார்.

பி.என்.ராய் மோடியிடம் சொன்னது அதைத்தான்.

No comments:

Post a Comment