Wednesday, July 22, 2015

ரஜனிகாந்தாக, சவுத்ரியாக, கர்ணனாக, பெரியத் தேவராக




காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் கலைஞனைப் பற்றிய கால தாமதமான பதிவு.

நடிகர் திலகத்தின் நினைவு நாளான நேற்று எழுதியிருக்க வேண்டும். அதனாலென்ன? சிவாஜி கணேசனின் படக்காட்சிகளை அவரது பிறந்த நாளன்றும் நினைவு நாளன்றும் மட்டும்தான் பார்க்க வேண்டுமா என்ன? தொலைக்காட்சி சேனல்களை மாற்றி வருகையில் தினசரி குறைந்தபட்சம் ஒரு முறையாவது அவரது முகம் கண்ணில் படாமல் கடந்திருக்கிறோமா!

எத்தனையெத்தனை பாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார்! எத்தனை வேடங்கள் மூலமாக அவர் நமது மனதில் நிலைத்திருக்கிறார்!

அகண்ட சமுத்திரத்திலிருந்து சில துளிகளை பருகுவோமா?

பாரிஸ்டர் ரஜனிகாந்தின் கம்பீரமும் கடைசி நொடியில் தளர்ந்து போவதையும் மறக்க முடியுமா? இரு வழக்கறிஞர்களின் ஆங்கில உச்சரிப்பும் அற்புதமல்லவா!

மகனிடம் பாசத்திற்காக மன்றாடும் ஒரு தகப்பன், கடமையுணர்வு மிக்க காவல்துறை அதிகாரியாக Now Let me talk like a police man  என்று மாறும் ரசவாதம் வேறு யாருக்கு இங்கே சாத்தியம்?

தனது திறமையை அலட்சியம் செய்யும் போது பொங்குகிற கர்ணனாக தனது சினத்தை வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்த முடியும்?

பஞ்சாயத்தில் அவமானப்படுத்தப்படுகையில் சீறுகிற, கூனிக் குறுகிப் போகிற பெரியத் தேவரைத்தான்  நம்மால் மறக்க முடியுமா?

மேலேயுள்ள காட்சிகளில்  கோப உணர்ச்சி  கொப்பளிக்குமென்றால்


வெகுளியான சாப்பாட்டு ராமனாக ராமன் எத்தனை ராமனடியில்.

கோரமான ஒரு தோற்றத்துடன் , அதுவும் இரு வேடங்களில் தெய்வ மகன்  படத்தில்.

இணைப்புக்களை பாருங்கள். நடிகர் திலகம் எனும் அற்புதக் கலைஞனின் அர்ப்பணிப்பில் மூழ்கி விடுவீர்கள்.

 
 

 

3 comments:

  1. சிவாஜி ஓர் பிறவிக் கலைஞன்

    ReplyDelete
  2. ரோஜாவைப் பாராட்டுவதற்கு நாள் நட்சத்திரம் என்ன? அவர் ஒரு அபூர்வ கலைஞர். அவர் எத்தகைய நடிப்பையும் வழங்குவதற்கான capacity உள்ளவர். இன்றைக்குப் பார்க்கும்போது அவர் கொஞ்சம் அதீத நடிப்பைத் தந்திருப்பதாகத் தோன்றினாலும், அந்தக் காலத்தில் மக்களின் மனதை மயக்கிய நடிப்பல்லவா. அதே கலைஞன் முதல் மரியாதையில் அடுத்த ஜெனெரேஷனுக்காக நடித்திருப்பார். அவர் நடிப்பில் எதையும் கொடுக்கும் அட்சயபாத்திரம். ஓரு சிவாஜி, ஒரு எம்.எஸ்.வி, ஒரு நாகேஷ்தான் உண்டு.

    அவரின் புகழை உபயோகப்படுத்தும் விதத்தில் (மக்களைத் திருப்திப்படுத்தாத) நிறைய படங்கள் வந்ததுண்டு (ஹிட்லர் உமானாத், இமயம் போன்று). அவரின் நடிப்புக்குத் தீனி போடும் விதத்தில் ஏராளமான படங்கள் உண்டு. இந்த நேரத்தில், நல்ல கதையுடன், சிவாஜி, தன் உச்சகட்ட நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக வாய்ப்புக் கொடுத்த இயக்குனர்களையும், கதாசிரியர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்.

    கர்ணன் படம் ஒன்று போதும் என்று நினைத்தால், கௌரவம் நினைவுக்கு வருகிறது. தொடர்ந்து பாசமலர், வீரபாண்டியக் கட்டபொம்மன், சிவாஜி ஓரங்க நாடகம் போன்று பல நினைவுக்கு வருகின்றன. அவர் புகழ் என்றும் நிலைக்கும்.

    ReplyDelete
  3. ஈடு இணையில்லாக் கலைஞன்!

    ReplyDelete