Tuesday, April 19, 2016

அழகுக்குப் பின்னே வேதனை

எங்கள் கேரளப் பயணத்தில் மிக முக்கியமான இடம் மூணாறு. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையே மலைப்பாதையில் குளிரோடு பயணிப்பது நன்றாகவே இருந்தது. 

தேயிலைச் செடிகளின் பச்சை போர்வை பார்ப்பதற்கு அழகாகவே இருந்தது. அழகழகான புகைப்படங்களை எடுக்க முடிந்தது. அவற்றை கீழேயளித்துள்ளேன். ஆனாலும் மனதில் ஒரு உறுத்தலும் வலியும் தொடர்ந்து கொண்டே இருந்தது. 

ஆம் ஒரு புத்தகமும் அதில் முன்னுரையாக கொடுக்கப்பட்ட ஒரு கவிதையும். 

அதை கடைசியில் பாருங்கள். இப்போது புகைப்படங்களைப் பாருங்கள்.

 


























எரியும் பனிக்காடு நாவலின் துவக்கத்தில் வரும் 

 
ஆனைமலைக்காடுகளில் தழைத்திருக்கும்
ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில்
அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள்.
… நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக் குடிக்கும்
ஒவ்வொரு துளி தேநீரிலும்
கலந்திருக்கிறது எமது உதிரம்….
 
என்ற கவிதை அழகை மீறி வலியை அளித்தது.
 
எரியும் பனிக்காடு நாவல் படித்து விட்டீர்களா? இல்லையென்றால் 
இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள். உங்களை படிக்கத் தூண்டும் என்று நம்புகிறேன். 

1 comment: