Friday, April 8, 2016

என்ன பெயர் வைக்கலாம்?

சமீபத்தில் ஒரு நிகழ்வில் பிரெட்டால் செய்த ஒரு இனிப்பு வஸ்து கொடுத்தார்கள்.

அதை இப்படித்தான் செய்திருக்கலாம் என்ற அனுமானத்தில் நானும் முயற்சித்தேன். அந்த செய்முறை உங்களுக்காக.

முதலில் பிரெட்டை டோஸ்ட் செய்து கொண்டேன்.


பிறகு அடுப்பில் சர்க்கரையை வைத்து ஜீரா தயார் செய்து கொண்டேன்.


அந்த ஜீராவில் டோஸ்ட் செய்த பிரெட்டுகளை ஊற வைத்துக் கொண்டேன்.


ஊறிய பிரெட்டுக்களை எடுத்து அதன் மீது கொஞ்சம் முந்திரி பொடியை தூவி இரண்டு திராட்சை வைத்து  அலங்கரித்து சாப்பிடக் கொடுத்தேன். திராட்சைக்குப் பதிலாக செர்ரி வைத்திருந்தால் இன்னும் அழகாக இருக்கும். ஆனால் கைவசம்  செர்ரி இல்லாததால் திராட்சை வைத்தேன். 



சுவை நன்றாக இருந்தது என்பது மகனின் கருத்து. 

ஆமாம். இதற்கு என்ன பெயர் என்ன என்று கேட்டான்.

அதானே, என்ன பெயர் வைக்கலாம்?

 
 

6 comments:

  1. சாப்பிடத்தான் ஆசை வருகிறதே தவிர, பெயர் வைக்க யோசனை வரவில்லை.

    ReplyDelete
  2. Almost similar to French toast, egg is missing

    ReplyDelete
  3. ப்ரெட் ஜாமூன் என்று பேர் வைத்தால், குலாப் ஜாமூன் கோவித்துக்கொள்ளவா போகிறது? ஜீராவிலேயே கொஞ்சம் வெண்ணெயையோ நெய்யையோ ஊற்றிவிட்டால், வாசனை இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  4. சுவைபிரியர்களே, இதை விட சுவையானதும் சத்துக்கள் கொண்டதுமான உணவுவகைகளை இந்த சமையல் கலை நிபுணர் ஏற்கனவே கண்டு பிடித்து இருக்கிறார்.

    ReplyDelete