Friday, June 17, 2016

அவர் இன்றும் வாழ்கிறார்



அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் எனும் தொழிற்சங்கம் மாபெரும் ஆல மரமாக திகழ ஆணி வேராக திகழ்ந்த மகத்தான தலைவர், இருபத்தி ஆறு ஆண்டுகள், அதன் பொதுச்செயலாளராக செயல்பட்ட,  தன் வாழ்நாள் முழுதையும் உழைக்கும் மக்களின் நலனுக்காக அர்ப்பணித்த

தோழர் சரோஜ் சவுத்ரி

அவர்களின் நினைவு நாள் இன்று. அவர் மறைந்து பதினாறு ஆண்டுகள் கடந்தாலும் அவர் இன்னும் எங்கள் மனதில் வாழ்கிறார். அவரது உரைகள், எழுத்துக்கள் மூலம் இன்னும் எங்களை வழி நடத்துகிறார். எழுச்சியூட்டுகிறார்.

அவர் கடைசியாக பங்கேற்றது ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அகில இந்திய மாநாடு. அம்மாநாட்டில் அவர் ஆற்றிய உரை இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. 

படியுங்கள், படியுங்கள், படித்துக் கொண்டே இருங்கள் என்று அந்த உரையில் வலியுறுத்துவார். 

பின்னொரு நாளில் அந்த உரையை தமிழாக்கம் செய்தேன். அப்போது அந்த உரை கண் முன்னே ஓடிக் கொண்டிருந்தது. முன்பே ஒரு பதிவு செய்துள்ளேன். 

அந்த இணைப்பை  இங்கே இணைத்துள்ளேன் 

அவரது சிறந்த கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்திற்கு இன்னும் செயல் வடிவம் தரவில்லை என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

தயவு செய்து படியுங்கள். இன்றைக்கும் பொருத்தமாகவே இருக்கும்.


No comments:

Post a Comment