Friday, August 19, 2016

இது போதும் பெண்ணே




நீ வென்றது வெள்ளியாய் இருக்கலாம்,
எங்களுக்கு அளித்தது தங்கமான தருணங்கள்.
இறுதி வரை நீ நடத்திய போராட்டத்தால்
எங்கள் உள்ளங்களை வென்றாய்.

தங்கம் இல்லாவிட்டால் என்ன?
தங்கம் வென்ற பெண்ணை
பல முறை தடுமாற வைத்தாயே!
இது போதும் பெண்ணே!

மானம் காத்த மங்கை நீ!
இந்திய வரலாற்றில் 
உனக்கான இடம் என்றும் நிரந்தரம்.

வாழ்த்துக்கள் சிந்து.

2 comments:

  1. சிந்துவின் வேகத்திற்கு தங்கம் வரும் என்று நம்பினேன்.
    அழகாகசொல்லிவிட்டீர்களே
    தங்கம் வென்ற பெண்ணை
    பல முறை தடுமாற வைத்தாயே!

    ReplyDelete