Tuesday, September 27, 2016

உண்மையைச் சொன்னால் வதந்திகள் பரவாது




நேற்று இரவு வேலூர் நகரின் பல முக்கியப் பகுதிகளில் எல்லாம் கடைகள் முன்னதாகவே அடைக்கப்பட்டு விட்டது.

முதலமைச்சர் பூரண உடல் நலனோடு உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசு அறிவிப்புக்கும் கடைகள் மூடப்பட்டதற்கும் நிச்சயமாக தொடர்பு இருக்கிறது.

முதல்வர் உடல் நலன் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமுமே. ஆனால் அவரது உடல்நிலை குறித்த தகவலை முழுமையாக பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் உண்மை நிலவரம் என்னெவென்றாவது அரசு அறிவிக்க வேண்டும்.

"காய்ச்சல் குணமாகி விட்டது. சீராக இருக்கிறார், உணவு சாப்பிடுகிறார் " என்று ஒரே செய்தியை மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நாளும் அறிவிக்கும் போதுதான் காய்ச்சல் குணமாகி சீராக இருக்கையில் ஏன் மருத்துவமனையிலேயே தொடர்ந்து இருக்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. 

"என் பெயரே மறந்து போகும் அளவிற்கு பாசம் காட்டிய மக்கள்" என்று வாட்ஸப்பில் சொன்னீர்களே, அந்த மக்களுக்கு கவலை இருக்காதா? உடல்நிலை சீராக இருக்கையில் ஒரு போட்டோவோ, வீடியோவோ, ஆடியோவோ அதே வாட்ஸப்பில் வெளியிட்டால் பிறகு வதந்திகள் எப்படி பரவும்?

வதந்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தமிழக அரசு செய்ய வேண்டியது உண்மை நிலவரத்தை மறைக்காமல் சொல்வதுதான்.

3 comments:

  1. உண்மைகளை மறைக்கும் போது வதந்திகள் பரவத்தான் செய்யும். காயச்சலுக்கு யாராவது மருத்துவமனையில் தங்குவார்களா?
    சில சமயம் காய்ச்சலுக்கு கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிட்டு வேலைக்கும் சென்றிருக்கிறேன்.

    ReplyDelete
  2. தோழரே, காய்ச்சலுக்காக பன்னீர்செல்வம் இனி தாடி வைத்த கொண்டு சோகமாக தோன்றினாலும் தோன்றுவார்! நீங்க எல்லோரும் அவருக்கு ஆறுதலாக இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. அதை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. நீங்கதான் எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லனும்

      Delete