Saturday, September 3, 2016

கலெக்டருக்கும் நாங்கதான் பொறுப்பு





01.09.2016 அன்று எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலக இன்சூரன்ஸ் வார விழாவை வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு எஸ்.ஏ.ராமன் துவக்கி வைத்துப் பேசினார்.

அவரது உரையில் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. எல்.ஐ.சி நிறுவனத்தின் முழக்கமான "உங்கள் நலன் எங்கள் பொறுப்பு" என்பதைச் சுட்டிக்காட்டி "என்னுடைய நலன் உங்களது பொறுப்பு"  ஆகவே நான் கவலை இல்லாமல் இருக்கலாம் என்றார்.

ஆம் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல, தேசத்தின் குடியரசுத் தலைவர் தொடங்கி விவசாயத் தொழிலாளி வரை காப்பீடு செய்துள்ள அனைவருக்கும் அதற்கான பலன் கிடைப்பது என்பதை எல்.ஐ.சி உறுதி செய்துள்ளது. எல்.ஐ.சி யை நாசமாக்க அன்று நினைத்த மன்மோகன், பசி வகையறாக்களுக்கும் இன்று நினைக்கிற மோடி, ஜெய்ட்லி கூட்டத்திற்கும் கூட இந்த உறுதி மொழி பொருந்தும். 

பாலிசிதாரர்களின் நலனுக்கு நாங்கள் பொறுப்பு. 

எல்.ஐ.சி யின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு? 

கண்டிப்பாக எல்.ஐ.சி யின் சட்டரீதியான உரிமையாளராக உள்ள மத்திய அரசு அல்ல. பாதுகாப்பே அவர்களிடமிருந்துதான் தேவைப்படுகிறது. 

எல்.ஐ.சி யால் பயன்பெறுகிற மக்கள்தான் பாதுகாப்பு. மக்களைத் திரட்டித்தான் எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இத்தனை நாள் பாதுகாத்து வந்திருக்கிறது. இனியும் அதே பாதையில் பயணிப்போம். 

கவலை வேண்டாம் கலெக்டர் சார். உங்கள் நலன், எங்கள் பொறுப்பு 
 



 

No comments:

Post a Comment