Saturday, October 29, 2016

மன்னிப்பாம் . . மண்ணாங்கட்டி




தான் என்றுமே திருந்தாத ஜென்மம் என்பதை  ஆசான் மீண்டும் நிரூபித்து விட்டார். 

நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்கள், மது அடிமைகளாய் இருக்கிற சரி பாதி ஆண்கள் கற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லாதவர்கள் என்றும் அவர்களை பணி நீக்கம் செய்ய விடாமல் தொழிற்சங்கங்கள் பாதுகாக்கின்றன என்ற பெயரில் மீண்டும் தனது வக்கிர சிந்தனையை ஆசான் வாந்தி எடுத்து விட்டார். 

முன்பு விஜயகாந்த் கேட்ட கேள்வியைத்தான் இவரைக் கேட்க வேண்டியிருக்கிறது.

"எத்தனை பேருக்கு இவர் ஊற்றிக் கொடுத்திருக்கிறார்?"

ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்கிற, அதற்காக போராடுகிற தொழிற்சங்க அமைப்புக்களின் மீதான காழ்ப்புணர்வை தானும் தொழிற்சங்கத்தில் இருந்ததாக சொல்லிக் கொண்டே வெளிப்படுத்துகிறார்.

தனிப்பட்ட ஒரு நிகழ்வை பொதுப்பிரச்சினையாக திசை திருப்புகிற சாமர்த்தியம் ஜெய மோகன் போன்ற  அறம் கெட்டவர்களுக்கு கை வந்த கலைதான்.

எத்தனையோ விமர்சனம் வந்த போதும் அதிலிருந்து கற்றுக் கொண்டு தன்னை திருத்திக் கொள்ள தயாராக இல்லாதவர் ஜெய மோகன். ஆணாதிக்க சிந்தனையும் காவி புத்தியும் ஊறிப் போயிருக்கிற  ஆசான்  கேட்டுள்ளது மன்னிப்பல்ல. 

இன்னொரு அவதூறு.

பின் குறிப்பு : இவர் இப்படியே போய்க் கொண்டிருந்தால் ஒவ்வொரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நொடியுமே வசை வந்து கொண்டுதான் இருக்கும்.

1 comment: