Thursday, January 5, 2017

நேத்து எங்க போச்சுய்யா வீரம்?




சென்னையில் காக்கிகள் நடத்திய அராஜகத்தைக் கண்டித்து  சம்பவம் நடந்த அதே மேடவாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய  கண்டனக் கூட்டத்தின் புகைப்படங்கள் கீழே உள்ளது. 


















ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தங்களின் வீரத்தைக் காண்பித்த காவலர்கள் நேற்று எங்கே போனார்கள்? மக்கள் திரள் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாமே!  ஆனால் அந்த நடராஜூம் ரவியும் முந்நூறு காவலர்கள் பாதுகாப்பில் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒளிந்து கொண்டார்கள்.




அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

காவிகளைத் தூண்டி விட்டு இப்படிவாலிபர் சங்கத்திற்கும் மாணவர் சங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தப்பும் தவறுமாக போஸ்டர் அடிக்க முடியும்!



இதிலே மோடியை தரம் கெட்டு பேசினார்கள் என்று வேறு எழுதி உள்ளனர். மோடியைப் பற்றி சாதாரணமாக பேசினாலே அது தரமற்ற பேச்சாகத்தான் இருக்கும், ஏனென்றால் அந்த அளவிற்கு தரம் கெட்ட மனிதர் அவர். 

முக்கியக் குறிப்பு

மேலே இருக்கும் படத்தை தீட்டியவர் ஓவியர் ரவி. அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்தும். 

செங்கொடியின் புதல்வர்களின்  போராட்ட உணர்வை எவ்வளவு அற்புதமாக சித்தரித்துள்ளார். 

 

No comments:

Post a Comment