Friday, February 10, 2017

வக்கீலைப் போல பேசுய்யா



வாட்ஸப்பில் வந்ததை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொண்டுள்ளேன். பின் குறிப்பு  வரை அவசியம் படிச்சுடுங்க.




*LL.B. class:*

_Professor:_ *If you have to give an orange, what will you say?*

_Student:_*Take this orange.*

_Prof:_ *No, Tell like a lawyer.*

_Student:_ *I* *Ramakrishna son of Satyamurthy resident of Chennai, Tamilnadu do here by solemnly affirm and voluntarily and consciously declare out of my volition and without any fear or favour or pressure or undue influence that I'm giving this fruit called orange on which I have absolute right, title and interest along with its peel, juice,seed and pulp.* *I am also giving you absolute and unqualified right and interest to cut,* *peel,store in freeze or eat it.*
*You will also have the right to give this along with its peel,* *juice,seed or pulp to any one whosoever.*
*I further declare that I will be solely responsible and liable for any dispute till today pertaining to this orange.* *And after this conveyance today,* *my relationship with this orange will cease to exist.*

_Prof:_ *My lordship, where is your feet....*       

சட்டக் கல்லூரியில் பேராசிரியர் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்.

பேராசிரியர் : இந்த ஆரஞ்சுப் பழத்தை யாருக்காக தருவதென்றால் எப்படி சொல்வீர்கள்?

மாணவர் : பழத்தை எடுத்துக்க.

பேராசிரியர் : ஒரு வக்கீலைப் போல சொல்லுங்க.

மாணவர் : சென்னையில் வசிக்கும் சத்தியமூர்த்தியின் மகனாகிய நான், சுய நினைவோடு, எவ்வித அச்சமோ, யாருடைய நிர்ப்பந்தமோ, அல்லது யாருக்கு சாதகமாகவோ இல்லாமல் சமர்ப்பிக்கும் பிரமாண வாக்குமூலம் என்னவென்றால் எனக்கு முழுமையாக பாத்தியப்பட்ட, எல்லாவித உரிமைகளும் கூடிய ஆரஞ்சு என்று அழைக்கப்படும் இந்த பழத்தை அதன் தோல், சுளை, விதை, சாறு ஆகியவற்றோடு உங்களுக்கு அளிக்கிறேன். இதன்  தோல், சுளை, விதை, சாறு ஆகியவற்றோடு வேறு யாருக்காவது அளிப்பதற்கோ அல்லது நீங்களே பயன்படுத்துவதற்கோ அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கவோ  உங்களுக்கு முழுமையான பாத்தியதை உண்டு. இப்பழம் தொடர்பாக ஏதேனும் வில்லங்கம் இருப்பின் அதனை போக்குவதற்கான் பொறுப்பு என்னுடையது என்று திட்டவட்டமாக உறுதி அளிக்கிறேன். உங்களிடம் இந்த பழத்தை ஒப்படைத்த பின்பு அதற்கும் எனக்குமான தொடர்பு இத்தோடு முடிந்து போகிறது.

"மை லார்ட், எங்கே உங்கள் கால்கள்?" என்று சொன்னபடியே பேராசியர் மாணவர் காலில் விழுகிறார்.

பின் குறிப்பு : தமிழக அரசியல் தொடர்பா எத்தனை மொக்கை ஜோக்குகளை மீண்டும் மீண்டும் படிச்சிருப்பீங்க. மாறுதலுக்கு இந்த மொக்கையையும் படிச்சா ஒன்னும் குறைஞ்சு போய்ட மாட்டீங்க.  

No comments:

Post a Comment