Monday, February 27, 2017

யாருக்கு அனாமதேய அடியாள் அதிகம்?




வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய நாள் முதல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவாரக்கும்பலை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வப்போது ஆசான் ஜெமோவும் வசை பாடுவதற்கு  வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பார்.

மோடியை விமர்சித்தால் நாராயணசாமி என்றொரு சங்கி மட்டும் அவ்வப்போது அபத்தமாக உளறி விட்டு போவார். கோபால கிருஷ்ணன் என்றொரு சங்கி வந்து எழுதினார். அவர் ஆபாசமாக கேட்ட அதே கேள்வியை அவரிடமே மீண்டும் கேட்ட பிறகு காணாமல் போய் விட்டார். சில அனாமதேயங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் கொண்டையை மறைக்கத் தெரியாத சிலரும் உண்டு என்பது வேறு விஷயம்.

நிற்க இந்த பதிவின் மூலம் நான் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால் 

அனாமதேயங்களாக வந்து ஆபாச வார்த்தைகள் பேசும் அடியாட்கள் யாருக்கு அதிகம்?

மோடி?
ஜக்கி?
ஜெமோ?

ஜக்கி - மோடி கிரிமினல் கூட்டணி பற்றி ஐந்து பதிவு எழுதியிருந்தேன். ஆனால் அப்போதெல்லாம் பெரிதாக அனாமதேயங்களை காணவில்லை. ஜக்கிக்கும் இதர பிற கார்ப்பரேட் சாமியார்களுக்கும் ஜால்ரா அடித்து மத வெறி விஷத்தை கக்கிய ஜெமோவை அரசியல் சாசனப்படி உள்ளே தூக்கிப் போட வேண்டும் என்று சொன்னவுடன் அனாமதேய அடியாட்கள் பொங்கிக் கொண்டு வருகிறார்கள். ஆபாச வார்த்தைகளுக்கும் குறைவே இல்லை.

இதிலிருந்து தெரிய வரும் உண்மை என்னவென்றால் 

மோடியை விட
ஜக்கியை விட

ஆசானுக்கே  அடியாட்கள் அதிகம்.

இந்த ஒரு காரணத்திற்காகவே ஆசானுக்கு "ஞான பீட" விருது கொடுக்க வேண்டும். 

ஞான பீட விருதுக்கு வாய்ப்பில்லையென்றால் குறைந்த பட்சம்
"ன பீட" விருதாவது கொடுங்கப்பா.

 

12 comments:

  1. I am not a sanghi. I coluld not bear your vulgar writings. That is why I wrote comments. You are exhibiting your shameless arrogance in articles and replies. You think freedom of expression is only for people (?) like you. If you are not in public domain and in Thamil Manam nobody bothers about your "aabaasa" thoughts. A trade union business man is calling others fools. True.

    ReplyDelete
  2. நாங்கள் "சங்கிகள்" கிடையாது என்று சொல்வதுதான் "சங்கிகளின் கலாச்சாரம்". அராஜகம் எனது எழுத்தில் கிடையாது. சங் பரிவார செயல்களில் உள்ளது. அதை கடுமையாக விமர்சிப்பதை உங்களால் தாங்க முடியாதது வியப்பாக உள்ளது. ஆபாசமாக உங்கள் கூட்டம் போடும் பின்னூட்டங்களை எனது தளத்தின் நாகரீகம் கருதி பிரசுரிப்பது கிடையாது.தொழிற்சங்கப்பணியை தொழில் என்று சொல்வதிலிருந்தே உங்கள் தரமும் உங்கள் மனதின் ஆபாசமும் வெளிப்படுகிறது.தனிப்பட்ட தாக்குதலை ஆரம்பித்தவர் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளவும். நான் ஒன்றும் யேசுநாதர் இல்லை, அடுத்த கன்னத்தை காண்பிக்க.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Hello Mr. Gopala Krisanghnan....since when did trade unionists become businessmen? And can you pinpoint the so-called "aabaasa" thoughts of Mr. Krishnan? I need statistics from you not the blunt pointless attack that the "sanghis" are famous for.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர். திரு கோபாலகிருஷ்ணன், அவரது மெயில் ஐ.டி கொடுத்தால் சங்கிகள் சிலர் அனாமதேயமாக போட்ட பின்னூட்டங்களை அவருக்கு அனுப்பி வைப்பேன். ஆபாசம் என்றால் என்னவென்று அப்போதாவது அவருக்கு புரிகிறதா பார்ப்போம்.

      Delete
  5. Forget foolish jeyamohan and other fools like me. you can write about Human Harvest , or Davids and Goliath (Chinese: 活摘,大衛戰紅魔) 2014 documentary film. You can educate fools like us. Whatever you write, I appreciate Communists effort (like vikramadityan) . Tomorrow they may beg Stalin or Sasikala for one half MLA seats.

    ReplyDelete
    Replies
    1. இப்படி திசைதிருப்புவதுதான் சங்கி கலாச்சாரம். உங்களை அடையாளம் காட்டிக் கொண்டதற்கு நன்றி. உங்களைப் போன்றவர்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தை விரயம் செய்யப்போவதில்லை. நாராயணசாமிக்கும் உங்களுக்கும் ஒன்றும் வித்தியாசம் கிடையாது. உங்கள் பின்னூட்டங்களுக்கும் இனி அதே மரியாதைதான்

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. After working so many years, still I could not buy a car. With gratuity amount I repaid my loan. In last three years I could not buy books in Neyveli book fare for more than 3000 rupees. I am not physically handicapped. I don't have good opinion about communists. Throughout my life I saw so many trade union leaders. I wish to call them as businessmen only.
    I don't want to give my e mail address because I am afraid of communists.
    I am not a member of any political party or any organisation.

    ReplyDelete
    Replies
    1. அபத்தம். அபாண்டம், பொறாமை,

      Delete
    2. திரு கோபாலகிருஷ்ணன், நீங்கள் சொல்ல வருவது என்ன என்பது நன்றாக புரிகிறது. கார் வைத்துள்ளேன், கால் பாதிக்கப்பட்டுள்ளேன். சென்னை புத்தக விழாவில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கி உள்ளேன். இதெல்லாம் தொழிற்சங்க தொழில் நடத்தி சேர்த்த பணம். இதுதானே?

      உங்கள் சிந்தனையின் ஆபாசம் புரிகிறதா?

      எனக்கு சங்கிகளைக் கண்டு பயம் கிடையாது. நான் நெய்வேலி வரும் தேதியை பகிரங்கமாக அறிவிக்கிறேன். இருபத்தி ஐந்து வருடமாக வரவு செலவு கணக்கு எழுதி வைத்துள்ளேன். நெய்வேலி எல்.ஐ.சி அலுவலகத்துக்கு வாருங்கள். கணக்கு காண்பிக்கிறேன்.

      உங்களால் ஏன் முடியவில்லை என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். It is personal. அதை கேட்குமளவிற்கு அநாகரீகமானவன் நான் அல்ல.

      நெய்வேலியில் எத்தனையோ தொழிற்சங்கத் தலைவர்களை பார்த்ததாக சொன்னீர்கள். வெற்றிகரமான வழக்கறிஞராக பணியாற்றிய ஒருவர், அத்தொழிலை விட்டு விட்டு முழு நேர தொழிற்சங்க ஊழியராக, ஐநூறு ரூபாய் அலவன்ஸோடு, என்.எல்.சி தொழிற்சங்கப் பணியாற்ற வந்த தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பற்றி தெரியுமா உங்களுக்கு?

      மார்க்சிஸ்ட் கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களின் வரவு செலவு, சொத்து, கடன் விபரங்களை ஒவ்வொரு வருடமும் தர வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

      காமாலைக் கண்ணாடியை கழட்டி வைக்கப்பாருங்கள்.

      உங்கள் வயதுக்கு மரியாதை கொடுத்து இவ்வளவு விரிவாக எழுதினேன். உங்கள் ஆபாச சிந்தனை தொடர்ந்தால், மரியாதை தொடரும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

      Delete
    3. Helo, Where you Mr Gopalakrishnan? Why are you keeping quiet? No New slander? No New Accusation? Come On Sir.

      Delete