Thursday, March 9, 2017

இருந்திருந்தாலும் இடைத்தேர்தல்தான்

ஜெ இறந்த காரணத்தாலேயே ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் வந்ததாய் சில பதிவுகளை முக நூலில் பார்த்தேன்.

இறந்ததால் அவரை புனிதராக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

ஜெ இருந்திருந்தாலும் இப்போது நிச்சயமாக ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்திருக்கும். 

உச்சநீதி மன்ற்த் தீர்ப்பின் விளைவாக அவர் சிறைக்கு போயிருப்பார். பதவி பறி போயிருக்கும். பத்தாண்டுகளுக்கு தேர்தலில் நிற்கும் உரிமையும் பறிக்கப்பட்டிருக்கும். 

இதுதான் யதார்த்தம்.

2 comments:

  1. ஆர்கே நகர் தொகுதியின் பெருமையை தமிழக வரலாற்றில் மறக்க தான் முடியுமா?
    ஊழல் குற்றத்துக்காக தண்டணை பெற்று வந்த ஜெயலலிதாவை ஆர்கே நகர் தொகுதி வாக்காள பெருமக்கள் 83.43 வீதம் வாக்களித்து ஆதரித்து, ஊர் சொத்தை கொள்ளை அடிப்பதற்கு அங்கிகாரம் வழங்கிய பெருமைமிக்க தொகுதி இது.
    மாட்டோடு சண்டை போட்டு வீரம் காட்டும் விளையாட்டு எமக்கு வேண்டுமென்று தமிழ் புரச்சியாளர்கள் பலர் ஒன்று கூடிய மெரிளா கடற்கரையில், ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களையும் கொளரவித்து ஒரு நினைவு சின்னம்,அல்லது ஒரு சிலை நிறுவபட வேண்டும்.

    ReplyDelete