Monday, May 15, 2017

இரண்டு சட்டைக்காரரும் சமாதி அம்மையாரின் ஏ.சி டாய்லெட்டும்.



. . .

யோகி ஆதித்யநாத்திடம் இரண்டே இரண்டு சட்டைதான் இருக்கு, இன்னா எளிமை! என்று வியந்து நம்மையும் வியக்கச் சொன்ன அந்த புளுகாண்டிகளை யாராவது பார்த்தீர்களா?

கற்பனை வளம் மிக்க அந்த கதாசிரியர்களை கொஞ்சம் இழுத்து வாருங்கள்.

எல்லையில் இறந்து போன ஒரு ராணுவ வீரர் பிரேம் சாகர் அவரது வீட்டிற்கு யோகியார் வருவதாக சொல்லியுள்ளார். அதனால் சிதிலமடைந்த சடலத்தை அடக்கம் செய்யாமல் காத்திருந்துள்ளனர். பிறகு வருகிறேன் என்று தொலைபேசியில் சொன்ன பிறகு தாமதமாக இறுதிச் சடங்குகள் நடந்துள்ளது.

மறுநாள் யோகியார் அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வருவதற்கு முன்பாக அந்த வீட்டில் ஒரு ஏ.சி பொறுத்தப்பட்டுள்ளது. சோபாக்களும் தரைக் கம்பளங்களும் போடப்பட்டுள்ளது. யோகியார் வந்தார். வழக்கமான சம்பிரதாய அனுதாப வார்த்தைகளைப் பேசினார். சென்றார்.

அவர் சென்ற அடுத்த அரை மணி நேரத்தில் ஏ.சி கழட்டப்பட்டது. சோபாக்களும் கம்பளமும் கூட எடுத்துச் செல்லப்பட்டு விட்டது.

ஆக இரண்டு உடைகள் மட்டுமே வைத்திருக்கிற எளிய போலிச் சாமியார் இறந்து போன ராணுவ வீரர் வீட்டிற்கு அங்கே ஏ.சி இல்லையென்றால் மற்ற வசதிகள் இல்லையென்றால் வர மாட்டார்.

யப்பா, கதாசிரியர்களே, ஒரு விஷயம் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். தற்போது மெரினா கடற்கரையில் சமாதி கொண்டுள்ள அம்மையாரின் முதல் ஆட்சிக் காலத்தில் அவர் எந்த ஊரில் பொதுக்கூட்டத்திற்குப் போனாலும் ஆடம்பர வளைவுகள், வானுயர கட் அவுட்கள், பாதையெங்கும் தூவப்பட்ட ரோஜா மலர்கள் ஆகியவற்றோடு குளிர் சாதன வசதி செய்யப்பட்ட ஒரு டாய்லெட்டும் அங்கே கட்டப்பட்டும். 1993 ல் அவர் வேலூர் வந்த போது அந்த தற்காலிக ஏ.சி டாய்லெட் கட்ட மட்டும் ஒரு லட்ச ரூபாய் செலவானதாகச் சொன்னார்கள்.

அந்த ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்து நடைபெற்ற தேர்தலில் அவர் உட்பட அதிமுக படு தோல்வி அடைந்ததற்கு அந்த ஆடம்பரமும் ஊதாரித்தனமுமே முக்கியமான காரணமாக இருந்தது.  

3 comments:

  1. ரெண்டு செட் உடைகள்.....

    எல்.கே.ஜி பாப்பாகூட நம்பாது

    ReplyDelete
  2. //அந்த ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்து நடைபெற்ற தேர்தலில் அவர் உட்பட அதிமுக படு தோல்வி அடைந்ததற்கு அந்த ஆடம்பரமும் ஊதாரித்தனமுமே முக்கியமான காரணமாக இருந்தது.//
    இதை ஏற்றுகொள்ள முடியவில்லை. அதே ஆடம்பரமும், ஊதாரித்தனத்தையும் ஜெயலலிதா தொடர்ந்து கடைப்பிடித்து, அராஜகங்கள் செய்தும், ஊழல்கள் செய்து சொத்துக்கள் குவித்தும், நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட பின்பும் மக்கள் அவரை ஆர்கேநகர் தொகுதியில் அமோக வெற்றி பெறசெய்தனர்.

    ReplyDelete
  3. சார்.. நான் அப்படி நினைக்கவில்லை. இது அதிகாரிகளின் வேலையாயிருக்கும். அரசியல்வாதிகளுக்கு, இப்படிச் செய்தால், பத்திரிகைகளில் நெகடிவ் இமேஜ் வரும் என்பதுகூடத் தெரியாமல் இருக்குமா? அதுவும் வீட்டுக்காரர், எல்லாவற்றையும் அதிகாரிகள் அகற்றிவிட்டனர் என்று பேட்டி கொடுக்கமாட்டாரா? இதைவிட, ஜஸ்ட் 1 லட்சத்துல இந்தப் பொருட்களை இலவசமாக அவருக்குக் கொடுத்திருந்தால் அது இன்னமும் பெரிய விளம்பரமல்லவா? உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

    ReplyDelete