Sunday, July 2, 2017

பாஜக தலைவரே சொன்னா சரியாதான் இருக்கும்



அடுத்த தேர்தல் வரை பொறுத்திருங்கள். அதிலே  மோடி மண்ணைத்தான் கவ்வப் போகிறார்.

இதைச் சொன்னது எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை. 

பாஜக கட்சியின் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது நிதியமைச்சராக இருந்தவர்.

பாஜக கட்சியை வழிநடத்துவதற்காக மூத்த தலைவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட "மார்க்கதரிசி மண்டல்"  என்ற குழுவின் உறுப்பினர். 

அவர் யஷ்வந்த் சின்ஹா.

அவங்க கட்சித்தலைவரே சொன்னா சரியாதான் இருக்கும்.


1 comment:

  1. பதிலாக எழுத நினைத்து ஒரு நீண்ட பதிவாகவே வந்துவிட்டது எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன் அதில் இருந்து கொஞ்சம் மட்டும் இங்கே....

    ஆக அந்த ஊரின் 300 ஓட்டுகளில் கிட்டதட்ட 150 ஓட்டுகள் தான் தேறும். அப்படியே தேறிய ஓட்டில் பாசக அல்லாத ஓட்டுக்களை பெயர் முகவரி படங்கள் வைத்து ஊருக்கு ஊர் அடையாளம் காண்பது எளிது.

    அப்படி அடையாளம் காணப்பட்ட வாக்காளர்களின் ஆதார் அட்டைகள் தேர்தல் நாளன்று வேலை செய்யவிடாமல் தடுப்பதற்கு ஒன்றும் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய தேவை இல்லை. ஒரே ஒரு டேட்டா பேசு அப்டேட்டு மூலமாக ஊர் ஊராக அழகாக கவித்து விட முடியும்.

    தேர்தல் முடிந்து முடிவுகள் செல்லாது என்று அறிவிக்க நீதிமன்றம் சென்றால் அன்றைக்கு மோடி புதிதாக ஒரு இந்தியாவை பெற்று எடுத்திருப்பார், அந்த புதிய இந்தியாவில் ஆதார் இல்லாதவர்கள் எல்லாம் ஏற்கனவே பாக்கிட்தானத்திற்கு போக மோடியின் சம்பந்தி நவாசு சரீப்பிடம் சொல்லி பாசுபோர்டு விசா எல்லாம் வாங்கியாச்சு என்று ஒரு நடு இரவு மசாலாவில் மோடி அடவு கட்டி ஆடுவார்.

    பிறகு என்ன மறுபடியும் ஒரு 5 ஆண்டுகள் உருண்டோடும், 5 ஆண்டுகள் நடக்கப்போகும் அந்த வழக்கில் இனி வரும் தேர்தல்களில் இந்த இந்த விதி முறைகளை எல்லாம் கடைபிடிக்க நீதிமன்றம் நிபந்தனைகள் விதிக்கும், பாசக அவைகளை எல்லாம் அப்படியே எடுத்துகொள்ளத் தேவை இல்லை என்று அழகாக சொல்லும். பிறகு பரோட்டா சோக்கு மாதிரி மறுபடியும் முதல்ல இருந்து. இப்படியே சளிக்க சளிக்க அட்சி செஞ்சு அவர்களுக்குள் ஒரு துரோகி கிளம்பி வெளியில் வந்தால் தான் எல்லாம் முடியும். அந்த துரோகிக்காக இந்தியா இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்துகிடக்க வேண்டி இருக்குமோ......

    ReplyDelete