Wednesday, August 16, 2017

இந்திராவை காமராஜர் பிரதமராக்க காரணம் . . .





தாஷ்கண்ட் நகரில் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி இறந்து போய் விட்டார். தேசமே துயரத்தில் தவித்தது. அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு காமராஜர் தலையில் விழுந்தது.

அவர் தனக்கு மிகவும் நம்பிக்கையான ஒருவரிடம் மட்டும் ஆலோசனை கேட்டார்.

அந்த நம்பிக்கையானவரும் சொன்னார்.

“மொரார்ஜியா, இந்திராவா என்று பார்த்தால் மொரார்ஜி நல்லவர்தான். ஆனால் இந்தியா மாதிரியான பிற்போக்குத்தனங்கள் நிரம்பிய ஒரு நாட்டில் ஒரு பெண் பிரதமரானால் அது பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் வர உதவிகரமாக இருக்கும். ஆகவே இந்திரா காந்தியை தேர்வு செய்யுங்கள்”

என்று ஆலோசனை சொன்னார். அது எவ்வளவு விபரீதங்களை உருவாக்கும் என்று அப்போது ஆலோசனை சொன்னவருக்கும் தெரியவில்லை. காமராஜருக்கும் தெரியவில்லை. ஆனாலும் அந்த ஆலோசனைப்படி இந்திரா காந்தியையே பிரதமராக்கினார் காமராஜர்.

இச்செய்தியில் மிக முக்கியமான செய்தி ஒன்று உண்டு.

காமராஜருக்கு ஆலோசனை சொன்னது நான்தான்.

பின் குறிப்பு

11 ஜனவரி 1966 அன்று லால் பகதூர் சாஸ்திரி இறந்து போனார் என்பதும் நான் பிறந்தது 19 மே 1966 என்பதும் இச்செய்திக்கு அவசியமில்லாத விஷயங்கள்.

5 comments:

  1. இமமாதிரியான தகவல்கள் நமக்கு புதிதல்லவே

    ReplyDelete

  2. 11 ஜனவரி 1966 அன்று லால் பகதூர் சாஸ்திரி இறந்து போனார் என்பதும் நான் பிறந்தது 19 மே 1966 என்பதும் இச்செய்திக்கு அவசியமில்லாத விஷயங்கள்.

    porakumbodhey...
    oru nalla thalaivarei.....


    hm... kalikaalam...aarambam aandhu annaikkuthaan....

    ReplyDelete
    Replies
    1. உன்னை மாதிரி சில அதிமேதாவிங்க வந்து மாட்டனும்தான் இந்த இரண்டாவது பின் குறிப்பை நேற்றைய பதிவில பகிர்ந்து கொள்ளவில்லை. விரிச்ச வலையில் கரெக்டா வந்து மாட்டிக்கிட்டேயே ராசா,

      பின் குறிப்பு 2

      தன்னை விமர்சித்தவர்களை அரைகுறை என்று சமஸ் சாடிய மறுநாளே, வாஞ்சிநாதன், முத்துராமலிங்கத் தேவர் பற்றி ஒரு அரைகுறை கட்டுரை தமிழ் இந்துவில் வர, பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். நானும் என் பங்கிற்கு செய்த முயற்சி இது.

      இப்பவாவது புரிஞ்சுதா?

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete