Wednesday, August 23, 2017

மோடி போலவே அந்த லேடியும் . . . .




மோடியைப் போலவே, சொல்லப்போனால் சில சமயம் மோடியை விட அதிகமே ஸ்டண்ட் அடிப்பவர், மோடியால் புதுவை துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்ட  முன்னாள் ஊழல் எதிர்ப்புப் போராளி (அப்படி வேடம் போட்ட) கிரண் பேடி அவர்கள்.

அவர்கள் நள்ளிரவில் நகர் உலா போன காணொளிக் காட்சி இங்கே.



நகர் உலா போவதை புகைப்படம் எடுக்கவும் காணொளி எடுக்கவும் ஏற்பாடு செய்து விட்டுத்தான் அம்மணி ராஜ் நிவாஸை விட்டு புறப்பட்டுள்ளார்.

சரியாக புகைப்படம் எடுக்கிறார்களா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்கிறார்.

ஆனால் பாவம் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது மட்டுமல்ல

அவர் போட்ட ஹெல்மெட் உத்தரவை அவரே பின்பற்றவில்லை என்ற விமர்சனம்தான் வந்தது.

விமர்சனம் செய்தவர்களுக்கு ஒரு விஷயம் ஏனோ புரியவில்லை.

ஹெல்மெட் போட்டால் புகைப்படத்தில் முகம் எப்படி நன்றாகத் தெரியும்?
புகைப்படத்தில் முகம் தெரியாவிட்டால் பின் என்ன எழவிற்கு நகர் உலா போவது?
 

7 comments:

  1. விமர்சனம் செய்பவர்களுக்கு புரியாவிட்டால் பரவாயில்லை.
    புதுவை கவிதை என் போன்ற பாமரர்க்கு புரியலையே.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் புரியவில்லையா?
      நம்ப முடியவில்லையே!

      வேறு ஏதாவது சொல்ல வருகிறீர்களா தோழர்?

      Delete
    2. அந்தாக்சரி ஆளு கையில் எல்லாம் சரி.

      Delete
    3. நான்தான் இப்போது புரியாத பாமரன்

      Delete
  2. depressed mind looks everything with black glasses and blames others for everything.

    ReplyDelete
    Replies
    1. haha. Arrogant mind with saffron glass will always try to suppress the voice of dissen. When each and every day some sanghi will make a blunder. When they give space every day to criticize, We can not miss it Mr Narayanaswami Natarajan

      Delete
  3. paditha tarkuri! God Saved AAP from stant rani...

    ReplyDelete