Thursday, August 24, 2017

கலெக்டர் எச்சரிக்கை காற்றோடு போகுமா?


கீழே உள்ள செய்தி இரு வாரங்களுக்கு முன்பு வெளியானது.



வேலூர் மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் பிள்ளையார் சிலையை கரைக்கலாம் என்ற பட்டியலோடு களி மண்ணோ, கிழங்கோ இல்லாமல்  இதர பொருட்கள் கொண்டு செய்யப்பட்ட, இரசாயண வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை அங்கே கரைக்க அனுமதிக்க முடியாது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

நாளைய பண்டிகைக்காக, இன்று பல இடங்களில் பிள்ளையார் சிலைகள் குட்டி யானை வண்டிகளில் "ஜெய் காளி, ஓம் காளி" முழக்கத்தோடு சென்று கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

அநேகமாக எல்லா பிள்ளையார்களும் பளிச்சென்று ரசாயன வண்ணம் பூசப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை சிலை வைக்கும் அமைப்புக்கள் மதிக்கவில்லை. ஆட்சியராவது சிலை கரைக்கும் இடங்களில் ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை ஏரிகளில் கரைப்பதை தடுப்பாரா?

அல்லது 

அவரது எச்சரிக்கையை அவரே காற்றில் பறக்க விட்டு விடுவாரா?
 

No comments:

Post a Comment