Wednesday, October 18, 2017

போட்டோஷாப்பால் சொல்லாதே



மேலே உள்ள படம் சங்கிகள் தயாரித்து உலவ விடுகிற வழக்கமான கேவலமான பொய். பக்கத்தில் உள்ள கேள்விகள் என்னுடையது.

கீழடியில் பிள்ளையார் சிலையும் சிவலிங்கமும் இருந்ததாகவும் அப்போதே அவர்கள் இந்துக்கள் என்று ஒரு கற்பனைக்கதையையும் தட்டி விட்டுள்ளார்கள்.

அடப்பாவிகளே  கீழடியில் இப்படி ஏதாவது கிடைத்திருந்தால் ஏன் கீழடி அகழ்வாராய்ச்சியில் மண்ணை அள்ளி மூடினீர்கள்? 

உங்கள் கட்டுக்கதைகளை  கீழடி உடைத்தெறிந்ததால்தானே எடப்பாடி, ஓ.பி.எஸ் போலவே இன்னொரு எடுபிடியான சீராமைக் கொண்டு வந்து கீழடிக்கு  முடிவுரை எழுதுகிறீர்கள்?

பிள்ளையார் சிலையோ அல்லது சிவ லிங்கமோ இருந்திருந்தால் அதை அகழ்வாராய்ச்சியினை தொடர்வதன் மூலம், கிடைக்கப்பட்ட பொருளை கார்பன் சோதனைக்கு உட்படுத்தி அதன் காலத்தை அறிந்து நிரூபிக்க காவிகளோ, காவியரசோ தயாரா?

அது முடியாது என்பதால்தானே இப்படி போட்டோஷாப்பை நாடுகிறீர்கள்? அதிலும் மதங்களுக்கிடையில் பகைமையை தூண்டுவது போன்ற வாசகங்கள். 

ஒவ்வொரு செயலிலும் காவிகள் தாங்கள் கேவலமானவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

 

6 comments:

  1. காவிகள் போட்டோசாப்பின் மூலம்தான் ஆதாரங்களை கொடுப்பார்கள் போட்டோ ஷாப் இல்லைன்னா மோடி சாப் இல்லை

    ReplyDelete
  2. கீழடியில் லிங்கம் , விநாயகர் கிடைத்தது பற்றி எனக்கு தெரியாது விநாயகர் கிடைத்து இருக்க வாய்ப்பும் இல்லை. விநாயகர் காலம் பிந்தியது என்று நம்புகின்றேன்
    ஆனால் திராவிட நாகரீகம் என்று சொல்லிக்கொள்ளும் ஹரப்பாவில் காலம் அறுதியிடப்படட பல லிங்க சிலைகள் கிடைத்துள்ளன . அது பற்றி தங்கள் கருத்து?
    .
    திராவிட , கம்யூனிச வாதிகள் இந்துமதம் தமிழர்களின் மதம் அல்ல அதை வெறுக்க வேண்டும் என்று இஸ்லாமிய பயங்கரவாதிகளுடனும் , கிறிஸ்தவ மத பரப்புநர்களுடனும் சேர்ந்து பிரச்சாரம் பண்ணும் போது பதிலடியாக அவர்களும் இவர்களை தாக்கி பதிலடி கொடுப்பார்கள்

    R.Raj Rajendra

    ReplyDelete
    Replies
    1. தவறான புரிதல். மாலை விரிவாக பதிலளிக்கிறேன்

      Delete
    2. முக்கிய குறிப்பு
      கேரளாவில் நிலை வேறு
      ஓணம் தேசிய பண்டிகை அங்கு
      கிருஷ்ண ஜெயந்தி .. கம்யூனிச போராளிகள் கூட பகிரங்கமாக கொண்டாடுவார்கள் ... கம்யூனிச ஜெயந்தி ஊர்வலம் கூட நடக்கும்

      R.Raj Rajendra

      Delete
    3. நீங்க விவாதிக்க விரும்புவதாக நினைத்தேன். ஆனால் உங்கள் முக்கியக் குறிப்பு உங்களது கம்யூனிஸ எதிர்ப்பு நிலையைக் காட்டுகிறது. எனவே உங்களுக்கு விளக்கம் அளிப்பது நம் இருவருக்கும் நேர விரயம் என்றே கருதுகிறேன்

      Delete
    4. அதை கம்யூனிச எதிர்ப்பாக எதுக்கு பார்க்கிண்றீர்கள்.
      கேரளாவில் கம்யூனிஸ்ட் மத நம்பிக்கைகளை மதிக்கின்றார்கள்
      ஆனால் தமிழகத்தில் செலெக்ட்டிவ் ஆக இருக்கின்றார்கள் என்று பாருங்கள்

      Delete