Monday, December 18, 2017

நிஜமாகவே மகிழ்ச்சியாய் உள்ளீரா மோடி?





குஜராத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன.

பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த பதிவை எழுதும் நேரத்தில்

பாஜக பெற்ற தொகுதிகள்                      99
காங்கிரஸ் பெற்ற தொகுதிகள்           80
இதரர்                                                  3

வெற்றி வெற்றிதான். ஆட்சியை தக்க வைத்தோம் என்பதற்காக  பாஜக மகிழ்ச்சியடையலாம்.

இந்த வெற்றிக்காக மோடி என்னவெல்லாம் செய்தார், என்னவெல்லாம் பேசினார் என்பதை மறந்து விட முடியுமா?

என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.
பாஜக விற்கு எதிராக பாகிஸ்தான் சதி செய்கிறது.
பாகிஸ்தான் ஆட்களோடு ரகசிய கூட்டம் நள்ளிரவில் நடக்கிறது.
என்னை இழிந்தவன் என்று சொல்கிறார்கள்.
நான்தான்  மண்ணின் மைந்தன்.
உங்களுக்கு கோவில்கள் வேண்டுமா? மசூதிகள் வேண்டுமா?

கண்ணீர் வடித்தார். கதறினார். ஊர் ஊராக அலைந்தார்.  சின்னப்பையன் என்று வர்ணித்து விட்டு அந்த பப்புவிற்கு எதிராகத்தான் பக்கம் பக்கமாக வசனம் பேசினார். ஆபாச வீடியோக்களை உருவாக்கி சுற்றுக்கு விட்டார்கள். மதுவிலக்கற்ற ஒரே மாநிலமாக நம்பப்படுகிற குஜராத்தில் மது பாட்டில்கள் தாராளமாக புழங்கின. சம்பிரதாயத்திற்கு பிடிபட்டவையே மலைக்க வைத்தது என்றால் குடிமகன்கள் பயன்படுத்தியவை எவ்வளவு இருக்கும்! தேர்தல் ஆணையமோ எடப்பாடி, ஓ.பி.எஸ் வகையறாக்களை விட மிகப்பெரிய அடிமையாக காட்சி தந்தது.

கற்றுக் கொண்ட அத்தனை கீழ்த்தரமான வித்தைகளை இறக்கிய பின்னரே கிடைத்தது இந்த வெற்றி.

ஆனாலும் இது நிஜமாகவே வெற்றிதானா?

மோடியின் கரங்கள் வலுப்பெற்றுள்ளதா?
அவரது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளாரா?

இல்லை.இல்லை.இல்லை

என்பதை பாஜகவினரின் மனசாட்சியே ஒப்புக் கொள்ளும். அதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள் என்பதும் முறியடிக்க முடியாதவர் மோடி என்றுதான் வெளியுலகில் பீற்றிக் கொள்வார்கள் என்பதும் நாமறிந்ததே. பாஜக ஆட்களுக்கு ஏதய்யா மனசாட்சி என்ற உங்களின் மைண்ட் வாய்ஸூம் உண்மைதான்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்திலும் ஹிமாச்சலப் பிரதேசத்திலும் அத்தனை இடங்களையும் கைப்பற்றியது போலத்தான் இந்த தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளதா?

“மரண பயத்தைக் காண்பிச்சுட்டாங்க பரமா” என்று அமித் ஷாவிடம் சொல்லாமலா இருந்திருக்கப் போகிறீர்கள். அந்த அளவிற்கு துவக்க நேர நிலவரங்கள் உங்கள் பதட்டத்தை அதிகரிக்கும் வண்ணம்தானே அமைந்திருந்தது!

ஒருவேளை கீழ்த்தரமான உத்திகளை பயன்படுத்தாமல், பிரிவினையை தூண்டாமல், சதி, கிதி என்றெல்லாம் புலம்பாமல், பாகிஸ்தானை இழுக்காது, தேர்தல் ஆணையத்தின் துணையேதும் இன்றி நேர்மையாக தேர்தலை அணுகி இருந்தால்

முடிவுகள் நிச்சயமாக மாறிப்போயிருக்கும்.

எப்போது தேர்தல் அறிவிப்பை தாமதப்படுத்த வைத்தீர்களோ, அப்போதே உங்களின் உண்மையான பவிசு என்ன என்பதை நீங்களே உணர்ந்து கொண்டுவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.

அதனால்தான் அத்தனை தகிடுதத்த வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம்.

ஆட்சியை தக்க வைத்திருக்கலாம். ஆனால் இந்த முடிவுகள் சொல்லும் செய்தி தெளிவானது.

இது மோடியின் வீழ்ச்சியின் தொடக்கம்.

அதனால்தான் பிரகாஷ்ராஜ் கேட்ட அதே கேள்வியையே நானும் கேட்கிறேன்.

நிஜமாகவே மகிழ்ச்சியாய் உள்ளீரா மோடி?

4 comments:

  1. Modi mastaan..nee nadiganda..nee nadiganda..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete