Tuesday, December 5, 2017

அந்த நல்லாட்சியின் லட்சணம் இதுதான்

அம்மா ஆட்சியைப் போல நல்லாட்சி உண்டா என்று ஒரு அனாமதேயர் சில நாட்கள் முன்பாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு எழுதிய அந்த பதிவு இன்று கண்ணில் பட்டது.

நம்பிக்கை ராஜ் என்ற ஃபேக் ஐ.டி கொண்ட அந்த அனாமதேயருக்கு அந்த பழைய பதிவை காணிக்கையாக்குகிறேன்.

*************************************************************************
08.01.2016 அன்று எழுதப்பட்ட 

 படா பேஜாரா போச்சு சார் !!!!


வழக்கமாக எங்கள் சாலையை சுத்தம் செய்யும் துப்புறவுத் தொழிலாளி அந்த தோழர். பல நாட்கள் அவரை பார்க்கவில்லை. இன்றுதான் கண்ணில் பட்டார். 
என்னங்க, கொஞ்ச நாளா காணோமே, எங்க மெட்ராஸ் போயிருந்தீங்களா என்று உரையாடலைத் தொடங்கினேன்.
ஆமாம் சார், ரொம்பவே அவஸ்தையாயிடுச்சு, பதினஞ்சு நாள் பெண்டு நிமித்திட்டாங்க. விடியக் காலயிலே எழுந்து துப்புறவு வேலைக்கு கூட்டிட்டு போயிடுவாங்க, ராத்திரில நிவாரணப் பொருளயெல்லாம் பேக் பண்ண வேற எடத்துக்கு கூட்டிட்டுப் போய்டுவாங்க. தூங்கக் கூட நேரமில்லை என்றார் அவர். 
தங்க வைச்ச இடமெல்லாம் எப்படி இருந்தது?
ஆட்டு மந்தை மாதிரி அடச்சு வைச்சுட்டாங்க. கொசுக்கடி வேற. ஒன்னு ரெண்டு நாள் குளிக்க தண்ணி கூட சரியா வரல.
சாப்பாட்டு வசதியெல்லாம்.
பக்கத்துல எங்க அம்மா ஓட்டல் இருக்கோ, அங்க போய் சாப்பிட்டுக்கோனு சொல்லிட்டாங்க. துட்டு எங்களதுதான்.
சரி, இவ்ளோ கஷ்டப்பட்டீங்களே. எவ்வளவு ரூபா கிடைச்சது?
அத கேக்காத சார், சொன்னா வெட்கக்கேடு. படா பேஜாராப் போச்சு சார்.
பார்த்துக் கொள்ளுங்கள், இதுதான் அம்மா ஆட்சியின் லட்சணம். உழைப்புச் சுரண்டலுக்கு இலக்கணம்.

2 comments:

  1. "நம்பிக்கை ராஜ் என்ற ஃபேக் ஐ.டி "
    உங்களை போல் அநாகரீகமான நபரை நான் இதுவரை பார்க்கவில்லை. உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து சொன்னால் fake id அவரை என்று சொல்லி வசைபாடுவது.
    நேரில் உங்களுக்கு சொல்லி இருந்தால் வெட்டி கொன்றிருப்பீர்கள்

    https://www.linkedin.com/in/nambikai-raj-46823958

    நான் மத்திய கிழக்கில் கவுரமான தொழில் செய்பவன் . எந்த நேரத்திலும் உங்களுடன் ஆபாசமாக , வசை பேசவில்லை. அப்படி இருந்தும் என் மீது வசை . வாழ்க சம தர்ம நாகரீகம்

    ReplyDelete
    Replies
    1. இன்றுதான் முதல் முறையாக உங்கள் அடையாளத்தோடு வந்துள்ளீர். இது நாள் வரை வந்தது அனாமதேயமாகத்தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

      கேரள கம்மனாட்டி அரசு என்ற சொல் மிகவும் நாகரீகமான சொல்லாடலோ?

      என்னுடையது எப்போதும் எதிர்வினைதான்.

      ஆபாசமாக எழுதுபவர்களுக்குக் கூட நான் ஆபாசமாக பதிலளித்தது கிடையாது.
      நாகரீகத்தை எதிர்பார்க்கும் முன்பு நீங்கள் அவ்வாறு நடந்து கொள்ளவும்

      Delete