Friday, December 8, 2017

இனிமேல் பா.மு.க நிலை?????????





எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் அவர்கள் காலமானார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் அவர் எழுதிய அப்புசாமி-சீத்தாப்பாட்டி கதைகள்தான்  எனது சிறு வயது வாசிப்புக்கு காரணமாக இருந்திருக்கிறது. தாத்தாவிற்கு இறுதி வெற்றி கிடைக்கவே கிடைக்காதா என்று ஏக்கமெல்லாம் அடைந்துள்ளேன்.

இன்று யோசித்து பார்த்தால் அந்த காலத்து கதைகளில் வரும் பெண்கள் எல்லாம் சோகம் நிறைந்தவர்களாக, கணவனாலோ அல்லது காதலனாலோ கைவிடப்பட்ட கண்ணீர் பதுமைகளாக, அனைத்தையும் அனுசரித்துப் போகும் பொறுமை மிகு பூமாதேவிகள் போலத்தான் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.

அந்த காலகட்டத்தில் தைரியம் மிகுந்த ஆளுமையாக, அறிவுகூர்மை உடையவராக சீத்தாபாட்டியின் கதாபாத்திரம் படைக்கப்பட்டது பாராட்டுதலுக்குரியது.

திரு ஜ.ரா.சு அவர்களின் மறைவு அப்புசாமி தாத்தா, சீத்தாப்பாட்டி, ரசகுண்டு, பீமாராவ், அரை பிளேடு பக்கிரி, பொன்னம்மா டேவிட் ஆகியோரையும் நம்மிடமிருந்து பிரித்து விட்டது.

பாட்டிகள் முன்னேற்றக் கழகமும் கலைக்கப்பட்டு விட வேண்டும்.
வேறு வழி?

1 comment:

  1. All the characters are immortal characters.very humorous way of story telling. I too like the characters, language n everything.let his soul rest in peace.

    ReplyDelete