Monday, March 5, 2018

திரிபுரா மக்களுக்கு AFSPA அல்வா !!!!



"அஸ்ஸாம் மாநிலம் முழுமைக்கும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces (Special Powers) Act மீண்டும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது"

நேற்றைய செய்தித்தாளில் இந்த ஒரு வரிச்செய்தியை எத்தனை பேர் கவனித்திருப்பார்களோ?

வட கிழக்கு மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கை ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதுதான். காஷ்மீரிலும் இது பிரதான கோரிக்கை.

எந்த வித அத்துமீறல் செய்தாலும் அதிலிருந்து சின்னஞ்சிறிய விசாரணை கூட இல்லாமல் ராணுவத்தினரை பாதுகாப்பது இந்த சட்டம்தான்.

மணிப்பூர் மாநில முதிய பெண்மணிகள் தங்கள் ஆடைகளைக் களைந்து ஆளுனர் மாளிகை முன்பு நடத்திய போராட்டமும் ஐரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டமும் இந்த சட்டத்தை அகற்ற வேண்டும் என்பதற்காகவே.

மூன்று வட கிழக்கு மாநிலங்களை முறைகேடாக பிடித்த அதே நாளில் அந்த மக்களின் உணர்வோடு ஒன்றியுள்ள ஒரு கோரிக்கைக்கு முரணாக அஸ்ஸாமில் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்துள்ளது மோடி அரசு.

வட கிழக்கு மாநிலங்களில் இச்சட்டம் அமலாகாத ஒரே மாநிலம் திரிபுரா மட்டுமே. இப்போது பாஜக அங்கே வந்துள்ள நிலையில் அங்கேயும் அச்சட்டம் அமலாகும். அதை வைத்துக் கொண்டு எப்படிப்பட்ட கொடுமைகளையும் இழைக்க முடியும்.

பாதுகாப்பு அரணை இழந்து விட்டு கொடிய வேடனிடமே தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ள திரிபுரா மாநில மக்களை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது. 

3 comments:

  1. Communists must have common-sense atleast'. சங்கி-மங்கி சதியால சசிகலா 'உள்ளே' போனது அதிமுக என்ற் கட்சிய அழிப்பதற்காக்! ஆனா நீங்க சந்தோஷ்ப்பட்டிங்க ! அதிமுக எங்கிற் சின்ன கட்சிய அழிப்பதற்காக மாநில-மத்திய தேர்தல் ஆணையம், ஹைகோர்ட்-சுப்ரீம் கோர்ட் காம்போ, அமலா-அக்காதுறை, சிபிஐ, கவர்ன்ர்-ஜனாதிபதி காம்போ எலலாசேர்ந்து முக்கிகிட்டு இருக்கானூவ. இவனுகளால் த்மிழ்நாடு என்னாபாடு பட்டுகிட்டுருக்குனு க்ண்கூடா பாத்துகிட்டு கொஞ்ச்ம்கூட அறிவிலலாமல் 2019 எலக்சன்னுல காங்கிரசுடன் கூட்டணி இல்லனு அறிவிக்கிற்துக்கு என்னா தெனாவட்டு வேணும் CPI (M)க்கு. Tripura lection reuslt is a lesson to communists. இலங்கை தமிழ்ர்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தை த்ற்காலிகமாக மன்னித்துவிட்டு காங்கிரசுடன் கூட்டணி சேர நாங்க த்யார், அப்பொ நிங்க?

    ReplyDelete
  2. நீ மட்டும் பிட்டு படம் போடுவாய். நான் எழுதினா அசிங்கமா

    ReplyDelete
  3. I do not know what forced these ladies to take that serious step. Can you please write on It? I am seriously asking.

    ReplyDelete