Tuesday, March 20, 2018

நீதிபதிகளிடமும் சொல்லுங்கள் யுவர் ஆனர்



காவல்துறை அதிகாரிகள் வீட்டில் காவல்துறையில் கீழ் மட்டத்தில் உள்ள காவலர்கள் ஆர்டர்லிகளாக வீட்டு வேலை பார்ப்பதை நேற்று சென்னை உயர்நீதி மன்றம் மிகக் கடுமையாக கண்டித்துள்ளது.

அரசாங்கம் தரும் ஊதியம் மக்களுக்கு சேவை செய்யத்தானே தவிர உயர் அதிகாரிகள் வீட்டு வேலை செய்வதற்காக அல்ல என்று  ஆணித்தரமாக சொல்லியுள்ளது.

மகிழ்ச்சி நீதிபதி அவர்களே!

உங்கள் தீர்ப்பை உங்களுக்கு கீழே உள்ள அனைத்து நீதி மன்றங்களுக்கும் அனுப்பி வையுங்கள்

மீனை ஒழுங்காக பொறிக்கவில்லை,
உள்ளாடையை தோய்க்கவில்லை.
வீட்டு வேலை செய்ய மறுக்கிறார்

என்று  சில நீதிபதிகள் தங்கள் ஊழியர்களை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

வீட்டு வேலை செய்யவோ, உள்ளாடையை தோய்க்கவோ நீதிமன்ற ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்பதை உங்கள் சுற்றறிக்கையில் அழுத்தமாக தெரிவியுங்கள்.

காவல்துறையிடம் காண்பித்த கண்டிப்பு சரியானது. பாராட்டுதலுக்குரியது. அதை உங்கள் துறையிலும் காண்பியுங்கள். நீதிமன்ற ஊழியர்கள் பல இடங்களில் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றார்கள். அதை மாற்றிடுங்கள். 


No comments:

Post a Comment