Saturday, March 3, 2018

அயோக்கியத்தனம், அபத்தம், ஆனாலும்



ஆர்.கே.நகர் பாணியில் பண விளையாட்டு, வழக்கமான இயந்திர விளையாட்டு, ஆளுனரை வைத்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம், ஒரு புறம் "பாரத் மாதா கீ ஜே" சொல்லிக் கொண்டு இன்னொரு புறம் தீவிரவாத அமைப்புக்களோடு கை குலுக்கல், வெற்று வார்த்தை விளையாட்டுக்கள், இத்தனை அயோக்கியத்தனங்கள் மூலம் கரிய மேகம் இல்லையில்லை காவி மேகம் திரிபுராவை சூழ்ந்துள்ளது வருத்தமளிக்கிறது. நேர்மையான ஆட்சியாளர்களை விட மோசடிப் பேர்வழிகளே ஆட்சிக்கு வருவதென்பது இந்திய ஜனநாயகத்தின் சாபக்கேடு.



44.7 % வாக்குகள் பெற்றவர்கள் தோற்றுப் போவதும் 41.4 % வாக்குகள் பெறுபவர்கள் ஆட்சியமைப்பதும் இந்திய தேர்தல் முறையின் மிகப் பெரிய அபத்தம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.

ஆனாலும்

சுய பரிசோதனைக்கான தேவை இருக்கிறது. களைகள் அங்கங்கே தலை காட்டாமல் இல்லை. அவை கறாராக அகற்றப்பட வேண்டும். அடுத்த வருட ஆபத்து கண் முன்னே தெரிகிறது. அதை முறியடிக்க முனைப்போடு இருக்க வேண்டும் என்று காலம் ஒலித்துள்ள எச்சரிக்கை மணியாக இம்முடிவுகளை பார்க்க வேண்டியுள்ளது. வாய்ப்பை தவற விட்டால் அடுத்த வாய்ப்புக்காக யாருமே மிஞ்சியிருக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும்.

ஹைதராபாத்தில் கூடுபவர்கள் தக்க முடிவுகளை எடுத்து தேசம் மீண்டும் சீரழியாமல பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கிரகணங்கள் நீடிப்பதில்லை. இதுதான் இயற்கையின் விதி. 

1 comment:

  1. Very much worried about Tripura election results.u have clearly n correctly mentioned about the fate of people n Indian democracy.also find it a right time for people to realize about marxcism n hindutva.

    ReplyDelete